TIK TOK செயலியால், மனைவியைக் கொலை செய்த கணவர்
Sooriyan Gossip - TIK TOK செயலியால், மனைவியைக் கொலை செய்த கணவர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
பல்லாயிரக்கணக்கான சமூக பாவனையாளர்களுக்கு மிகப்பிடித்த செயலி TIK TOK ஆகும்.
சிறுவர்கள் முதல் அனைத்து வயதினரும் அதிகமாக விரும்பும் இந்த செயலியால், ஒருவர் தனது மனைவியைக் கொலை செய்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் உள்ள குளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், அண்மைக்காலமாக தனது மனைவி TIK TOK செயலியில் பல காணொளிகளை வெளியிடுகின்றமை குறித்து கோபமடைந்ததுடன், அவரை பலமுறை கண்டித்துள்ளார்.
எனினும் கணவர் கண்டித்த பின்னரும், தொடர்ந்தும் அந்த பெண், TIK TOK இல் பல காணொளிகளை பதிவு செய்து வெளியிட்டு வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் கணவர், அயல் வீட்டார் இல்லாத நேரத்தில், தனது மனைவியைக் கொலை செய்ததுடன், காவல்துறையில் சரணடைந்துள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ளவர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.