தமிழகத்திலுள்ள அரச மருத்துவமனை ஒன்றில் திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் கைத்தொலைபேசியில் உள்ள வெளிச்சத்தைக் கொண்டு, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து நோயாளியைக் காப்பாற்றிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மதுரை அரச மருத்துவமனையிலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. அந்த மருத்துவமனையில் மின்வெட்டு ஏற்பட்டவுடன், மின் பிறப்பாக்கி இயந்திரமும் செயலிழந்தது.
இதனை அடுத்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு, கைத்தொலைபேசியின் வெளிச்சத்தைக் கொண்டு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதன் காரணமாக, குறித்த நோயாளி காப்பாற்றப்பட்டுள்ளார். இதனை அடுத்து சத்திர சிகிச்சையை மேற்கொண்டு சாதனை படைத்த மருத்துவர்களுக்கு, பாராட்டு மழை குவிந்த வண்ணமுள்ளது.