அபுதாபியில் பணி புரிந்து வரும் இந்தியர் ஒருவருக்கு, லொத்தர் சீட்டு மூலம் இலங்கை பெறுமதிக்கு கிட்டத்தட்ட 45 கோடி ரூபா பரிசு விழுந்துள்ளது.
அங்கு லொத்தர் சீட்டுக்கள் விற்பனையாகி, மாதம் தோறும் குலுக்கல் நடைபெறும். அந்தவகையில் இந்த முறை குலுக்கப்பட்ட சீட்டில், சஞ்சய் நாத் என்ற இந்தியருக்கு முதல் பரிசு விழுந்துள்ளது. இதன் மதிப்பு இந்தியப் பெறுமதிக்கு 18 கோடி ரூபாய் ஆகும்.
இந்த குலுக்கல் மூலம் பங்களாதேசத்தை சேர்ந்தவருக்கு இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது. இந்தநிலையில், அங்கு லொத்தர் சீட்டுக்கள் மூலம் அதிகளவிலான பரிசுத் தொகை இந்தியர்களுக்கு கிடைப்பதாகவும் கூறப்படுகின்றது.
ஏற்கனவே இது போன்று 10 இந்தியர்கள் கோடிகளில் பரிசு வென்றுள்ளனர் என்றும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.