ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியா நாட்டில் வெயிலின் தாக்கத்தால் அங்கு கடுமையான வறட்சி நீடிக்கின்றது. இதனால் அந்நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக ஐநா அவசர கால மீட்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த வெயில் காலம் முடிவதற்குள் அங்குள்ள மக்களில் சுமார் 20 லட்சம் மக்கள் பசியால் பலியாகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக, ஐநா அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த வெய்யில் மற்றும் வறட்சி காரணமாக அந்நாட்டில் கால்நடைகளும், பயிர்களும் பெருமளவில் அழிந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில், மீட்புப் பணிக்கே சுமார் 70 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் என ஐநா தெரிவித்துள்ளது.
மக்களின் உணவு மற்றும் தண்ணீருக்காக மட்டும் சோமாலியா, கென்யா மற்றும் எத்தியோப்பியா பகுதிகளுக்கு ஐநா சுமார் 45 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது.
இருப்பினும் பொருளாதார உதவிகள் கிடைக்கத் தாமதமானால் கூட, மக்களின் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் ஐநா எச்சரிக்கை செய்துள்ளது.