அண்மையில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு முதல், பொதுமக்கள் விண்வெளிக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளது.
விண்வெளிக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள ஆர்வப்படும் சுற்றுலாப் பயணிகளுக்கு நாசாவின் தலைமை அதிகாரி தெரிவிக்கையில், விண்வெளி சுற்றுலாவிற்கு ஏற்றவகையில் விண்வெளியில் மையம் ஒன்று, பொதுமக்கள் தங்குவதற்கு அமைக்கப்படவுள்ளது.
ஆகவே இந்த ஆண்டின் இறுதியில் இதற்கான சோதனை பயணம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சோதனை பயணத்திற்கு பின்னர் வர்த்தக ரீதியாக விண்வெளிக்கு சுற்றுலா செல்வது நடைமுறைக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பால் செல்வந்தர்கள் மற்றும் ஆர்வமுடைய சுற்றுலாப் பயணிகள் விண்வெளிக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.