பிரபல நடிகர் கிரேசி மோகன் அவர்களின் திடீர் மரணம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், ரசிகர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இறப்பதற்கு முன்பு கிரேசி மோகன் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் அஜித் பற்றி நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். "நான் வெளியில் சென்றால் பலரும் என்னிடம் ஒரு குறிப்பிட்ட நடிகரைதான் அது யாரென்றால் அஜித். அவரை பற்றித்தான் பெரும்பாலான மக்கள் கேட்கிறார்கள். அவருக்கு இவ்வளவு பெரிய ரசிகர் கூட்டம் இருப்பதைப் பார்த்து வியந்தேன்.
அஜித்தின் வீட்டுக்கு நான் ஒருமுறை சென்றிருந்தேன். அந்த வேளையில் அவர் வீட்டில் ஒரு பெரிய சாய் பாபா படம் இருப்பதை பார்த்து "நான் சாய் பக்தன் என்பதால் அதுபோல ஒன்று கிடைக்குமா? என அஜித்திடம் கேட்டேன்.
பின்பு சில நாட்கள் கழித்து அதுபோல ஒன்று, என் வீடு தேடி வந்தது. நான் எதிர்பார்க்கவே இல்லை" என கிரேசி மோகன் நெகிழ்ச்சியாக பேசியிருந்தார்.
இந்த நிலையில் கிரேசி மோகனின் மறைவு, மிகப்பெரும் வருத்தத்தைத் தந்ததுடன், மேற்குறிப்பிட்ட சம்பவத்தையும் நினைவூட்டுவதாக, தல அஜித் கூறியுள்ளார்.