ஓகே கண்மணி’யில் காதலையும், ‘காஞ்சனா 2’ வில் கடும் கோபத்தையும் கொட்டிய நித்யா மேனன்தான் இன்றைய சூழ்நிலையில் ஆச்சர்ய நடிகை. இதுவரை கண்டுகொள்ளப்படாமல் இருந்த நித்யா இப்போது தேடப்படும் நடிகையாகியிருக்கிறார். அடுத்தடுத்த இரண்டு ஹிட்டுகளுக்குப் பிறகு சந்தோஷத்தில் இருக்கும் அவரை சந்தித்தபோது...
“பொதுவா எந்தப் படத்தில் நடித்தாலும் அதோட வெற்றி தோல்வி பற்றி நான் கணக்கிலெடுத்துக் கொள்வதில்லை. அந்த படத்தில் நான் எப்படி நடித்திருக்கிறேன். அதனை ரசிகர்கள் எப்படி ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதையே பார்க்கிறேன். வரவு செலவு கணக்கு பார்ப்பது தயாரிப்பாளர் வேலை.
வெற்றியை வைத்து சம்பளம் உயர்த்துவது, தோல்வியை வைத்து சம்பளத்தை குறைப்பது என்பது போன்ற வியாபார யுக்திகள் என்றைக்கும் என்னிடம் இல்லை. என் உழைப்புக்கேற்ற ஊதியத்தை கேட்டு வாங்கிக் கொள்வேன். சிறிய சம்பளமாக இருந்தாலும் நடிப்பேன். ஆனால் ஒத்துக்கொண்ட சம்பளத்தை தராமல் ஏமாற்றினால் சும்மா விடமாட்–்டேன்.
எந்த ஒரு படமாக இருந்தாலும் படத்தின் கதை, என்னுடைய கேரக்டர், நான் அணிய வேண்டிய உடை, நடிக்க வேண்டிய காட்சிகள் இவற்றைப் பற்றி ஆயிரம் கேள்விகள் கேட்டு நான் தெளிவான பிறகே நடிக்க ஒப்புக் கொள்வேன். என் கேரக்டர் பற்றி ெதரிந்து ெகாண்டால்தான் அந்த கேரக்டரில் என்னைப் பொருத்திக்கொண்டு நடிக்க முடியும் என்பதால் இந்த கேள்விகள். இதனால் என்னை திமிர் பிடித்தவள் என்பார்கள். நிறைய கண்டிசன் போடுகிறார் என்பார்கள். அதைப்பற்றி கவலைப்படவில்லை.
‘ஓகே கண்மணி’ கதையைக் கேட்டவுடன் ‘ஓகே’ சொன்னேன். காரணம், நானும் துல்கரும் 3 மலையாளப் படத்தில் ேசர்ந்து நடித்திருக்கிறோம், எங்களுக்குள் கெமிஸ்ட்ரி ஈசியா ஒர்க் அவுட் ஆகும். ‘காஞ்சனா’ படத்துக்கு உடனே ஒப்புக் கொள்ளவில்லை. அந்த மாற்றுத் திறனாளி கேரக்டரில் என்னால் நடிக்க முடியுமா என்று என்னை நானே சோதித்துப் பார்த்துதான் ஒப்புக் கொண்டேன்.” அதுதான் நித்யா !!
-கோடம்பாக்கக் குருவி-