நடிகர் தனுஷ் அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். சில நாட்கள் முன்பு தான் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.இந்த படத்திற்கு கர்ணன் என பெயர் வைத்திருப்பதாக தயாரிப்பாளர் தாணு அதிகாரபூர்வமாக அறிவித்தார். இந்நிலையில் இதற்கு நடிகர் சிவாஜி ரசிகர் மன்றத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
"கர்ணன் பெயரை மீண்டும் பயன்படுத்துவது சரியல்ல. பெயரில் ஏதாவது இணைத்து வெளியிட்டால் நன்றாக இருக்கும்" என நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப் பேரவைத் தலைவர் சந்திரசேகரன் கூறியுள்ளார்.