மது அருந்தினால் அது அழிவே என்று எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும், அதை பலரும் அருந்தியே வருகிறார்கள்.
இப்படி இருக்க, சூப்பர் மார்க்கெட் ஒன்றில் மதுபானம் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த பகுதிக்குச் சென்ற பன்றிகள் சில, அவற்றை அருந்திய வினோத சம்பவம் ரஷியாவில் நிகழ்ந்துள்ளது.
ரஷியாவின் சைபீரியா பிராந்தியத்தில் உள்ளது டையுமன் நகரத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவத்தின் போது, சூப்பர் மார்க்கெட்டுக்குள் 3 பன்றிகள் நுழைந்து தமது வேலையை ஆரம்பித்து இருக்கின்றன.
இதில், சூப்பர் மார்க்கெட்டில் இருந்தவர்கள் பன்றியை விரட்டினார்களோ என்றால் அதுதான் இல்லை.
அந்த சூப்பர் மார்க்கெட்டில் இருந்தவர்களோ, பன்றிகள் என்ன செய்கின்றன என்பதை காண்பதற்காக அவற்றை விரட்டாமல் வீடியோ எடுத்தனர்.
பன்றிகள் மதுபானப் போத்தல்கள் இருந்த அடுக்குகளை கண்ட பின் அதிலிருந்த இரண்டு மது பாட்டில்களை கீழே தள்ளி உடைத்து, தரையில் சிந்திய மதுவை குடித்துள்ளன. இந்த வினோத நிகழ்வை அங்கிருந்தவர்கள் காமெரா மூலம் பதிவு செய்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்கள்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.