ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களுக்கு இசையமைத்து புகழ் சம்பாதித்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல், இளைஞர்களுக்கு ஏற்ற துள்ளிசைப் பாடல்களையும் பாடி பாடகராகவும் வலம் வந்தவர் இசையமைப்பாளர் விஜய் அண்டனி.
பின்நாளில், நடிப்பதில் ஆர்வம் கொண்டு 'நான்' திரைப்படத்தில் நடிகராக களமிறங்கினார். எதிர்பார்த்தளவுக்கு படம் கை கொடுக்காவிட்டாலும், மீண்டும் வேதாளமாய் அடுத்த கதையோடு சலீம் என்ற பெயரில் கோதாவில் குதித்தார்.
நடிப்பில் கொண்ட ஆர்வத்தினால் இசையமைக்க வந்த வாய்ப்புக்களையும் தவிர்த்து வந்தார். சலீம் வேகமாக உருவாகினாலும் பல சிக்கல்களை சந்தித்து , இந்தா அந்தா என்று இழுபறியில் ரிலீசுக்கு தயாராகவுள்ளது.
இந்நிலையில், இப்பொழுது இன்னுமொரு அதிரடி முடிவினை வெளியிட்டிருக்கிறார்.
இனிமேல் எந்த ஹீரோக்களின் படத்துக்கும் இசையமைக்கப் போவதில்லை.
காரணம் என்னவென்றால், நான் நடிக்கும் படங்களில் தான் கவனம் செலுத்தப் போகிறேன். இசையமைப்பை கொஞ்சம் தள்ளி வைக்க உத்தேசித்துள்ளேன் என்கிறார் விஜய் அண்டனி.
இருக்கிறதை விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப்படுறது ரொம்ப தப்புன்னு
இன்னும் கொஞ்ச நாள்ல உணருவீங்க சாரு..
(கோடம்பாக்கத்து குருவி)