ஸ்பெயினில் நடந்த தக்காளி திருவிழாவில், 1.25 லட்சம் கிலோ தக்காளி கூழாக்கப்பட்டது.
இது ஒவ்வொரு ஆண்டிலும் ஸ்பெய்னில் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ஒரு திருவிழாவாகும்.
கடந்த 1945ல், தக்காளித் திருவிழா, ஸ்பெயின் நாட்டின், புணால் நகரில் துவங்கியது.

ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த திருவிழா, கடந்த புதன்கிழமை நடந்தது. இதில், 40 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். குவித்து வைக்கப்பட்டிருந்த, 1.25 லட்சம் கிலோ தக்காளிகளை எடுத்து, ஒருவர் மீது ஒருவர் எறிந்து விழாவை கொண்டாடினர்.
ஸ்பெயினில் நடக்கும், இந்த விழாவைக் காண, உலகம் முழுவதிலும் இருந்து, ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள், புணால் நகருக்கு படையெடுத்து வருகை தந்திருந்தனர்.