நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக ஆண்டாண்டு காலமாக பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள் எல்லாரும். அரசியலுக்கு வருவீர்களா என்று அவரிடம் கேட்டால் "எல்லாம் ஆண்டவன் செயல்" என்பது தான் இது வரை அவர் பதிலாகவும் இருந்தது. இதுவரை
ரஜினி அரசியலுக்கு வருவாரா?....மாட்டாரா? என்பதை உறுதியாக அறிவிக்கவில்லை. அவ்வப்போது இதுகுறித்து ஊகத்தின் அடிப்படையில் ஏதாவது கதைகள் வருவது நாங்கள் அறிந்தது தான்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு தேர்தலின் போதும் ரஜினி ரசிகர்களும் அவருக்கு நெருக்கடி கொடுப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. லோக்சபா தேர்தலின் போது சென்னைக்கு பிரசாரத்துக்கு வந்த நரேந்திர மோடி, ரஜினி வீட்டுக்கே சென்று சந்திக்க அரசியல் அரங்கில் பரபரப்பும் எதிர்பார்ப்பும் அதிகமானது.ஆனாலும்
ரஜினிகாந்த் வெளிப்படையாக எதனையும் சொல்லவில்லை.சிலநாட்களுக்கு முன் ஊடகத்துறை சார்ந்தவர்கள் அவரிடம் அரசியல்பிரவேசம் மற்றும் அவருடைய வெற்றி பற்றி கேட்டபோது "எல்லாம் மக்கள் கையில்.." என்ற வார்த்தையை முதன்முதலாக சொல்லியிருந்தார்.
இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித்ஷா, ரஜினியை தொலைபேசியில் அடிக்கடி தொடர்பு கொண்டு, அரசியலில் குதிக்கச்சொல்லி பாஜக மேலிடம் அழுத்தம் கொடுக்க கொடுக்க ரஜினிக்கு வீட்டிலும் நெருக்கடி ஆரம்பித்திருக்கிறதாம்.
அதாவது, இதுவரை திமுக தலைவர் கருணாநிதியை எதிர்ப்பதில் நம்ம
சூப்பர் ஸ்டார்க்கு இஷ்டமில்லையாம்.தற்போது திமுக உட்கட்சி பூசலால் இனிவரும் தேர்தலில் கருணாநிதிக்கான வாய்ப்புகள் குறைவு என்பதால், பாஜக வில் தனித்து இணையாமல், தனிக் கட்சி தொடங்கி பாஜக அணியில் உள்ள இதர கட்சிகள் அனைத்தையும் விட மிக மிக கூடுதலான தொகுதிகளில் போட்டியிட்டால்தான் மரியாதையாக இருக்கும் என்பதும் ரஜினியின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் அட்வைஸாம். ரஜினிக்கும் தற்போது இது சரி என தோணவே தனக்கு நெருக்கமானவர்களிடம் ஆலோசனைகளை நடத்தி வருகிறாராம்.
ஆசை யாரைத்தான் விட்டது....? இருந்தாலும் ஜெயிப்பதும் தோற்பதும் நம்கையில் இல்லையே... அதுவும் சூப்பர்ஸ்டார் சொல்வதுபோல "ஆண்டவன் கையில் தானே...." இறங்கிடுங்க தலைவா.