தமிழ் சினிமாவில், தற்போது வெளிவரவிருக்கும் மாஸ் ஹீரோக்களின் படங்கள் பற்றியே தான் பேச்சாக இருக்கும் நிலையில், நம்ம
தல அஜித் நடிக்கும் புதிய படத்தில்,நாயகிகளாக திரிஷா மற்றும் அனுஷ்கா ஆகியோர் நடிக்க,இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ராஜஸ்தானில் இடம்பெற்று வருகின்றது. . இதன் வெளியீட்டுக்கான வேலைகளும், முன்னோட்ட காட்சி அமைக்கும் பணிகளும் தொழில்நுட்பகுழுவினால் வேகமாக மேற்கொள்ளபடுகின்றது.
இந்தநிலையில் தான், தல ரசிகர்களை கோபப்படுத்தும் விதமாக, அஜித் உடன் அடுத்த படத்தில் நடிக்க மாட்டேன் என சொல்லியிருக்கிறார் இந்த படத்தின்
நாயகி அனுஷ்கா.
அண்மையில் இந்த படத்தின் இயக்குனர் கெளதம்மேனன் ஆங்கிலப்பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளிக்கும்போது, இந்தப் படத்தில் "தல" இன் கேரக்டர் எல்லாரும் பேசும்படியாக இருக்கும் என்றும், அதனால் இந்த படத்துடன் அவரது கேரக்டரை முடிக்காமல் அஜித்தின் அனுமதியுடன், இதன் இரண்டாம் பாகத்தையும் எடுக்கும் எண்ணத்தில் இருப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்த செய்தி வெளியான நிலையில் அனுஷ்கா அவசர அவசரமாக தனது மறுப்பை வெளியிட்டிருக்கிறார்.
அடுத்த பகுதியில் அஜித்துடன் தான் நடிக்க மாட்டேன் என்று பட்டுத் தெறித்ததுபோல சொல்லிவிட்டார் அனுஷ்கா.
இந்த நிலையிலேயே
அஜித் ரசிகர்கள் ரொம்பவும் அதிர்ச்சியும் கோபமும் அடைந்துள்ளார்களாம்.
ஆனால், இதுவரை தான் ஒப்பந்தமாகியிருக்கும் படங்களை முடித்து கொடுத்ததும், திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் அதனால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து கொடுக்க முடியாது எனவும் தன்னிலை விளக்கம் சொல்லியிருக்கிறார் நாயகி அனுஷ்கா.
தல ரசிகர்கள் அமைதியாகினார்களா?