தலைப்பை பார்த்து தப்பு தப்பா கணக்கு போடும் அன்பர்களே!
அப்பிடி இப்பிடி .. அந்த மாதிரி இந்த மாதிரி எல்லாம் யோசிக்கிறதை நிறுத்துங்கப்பா.
விஷயம் இதுதான், பொறுமையா படிங்க புரியும்!
கடந்த 2010இல் ஜி.வியுடன் ஸ்ரேயா கோஷல் இணைந்து அங்காடித்தெரு படத்தில் வரும் ' உன்பேரைச் சொல்லும் போதே' பாடலை நமக்கு கொடுத்திருந்தார்.
அதன்பிறகு, இந்த குயிலும் பிஸி, ஜி.வியும் பிஸி!
இப்பொழுது இதே டீம் மீண்டும் களமிறங்கி இருக்கிறது.
கார்த்தி நடித்து வரும் கொம்பன் படத்தில் ஜி.வியின் இசையில் ஒரு பாடலும் , ஜி.வி பிரகாஷ் தானே இசையமைத்து நடித்துவரும் டார்லிங் படத்தில் ஒரு பாடலுமாய் இரு பாடல்களை நான்கு வருடங்கள் கழித்து ஜி.வியின் இசையில் பாடி இருக்கிறார் ஸ்ரேயா கோஷல் !
அத்தோடு, இருவரும் இணைந்து ஒரு செல்பியும் க்ளிக் பண்ணிருக்காங்க..
இதை மகிழ்ச்சியுடன் GV பிரகாஷ் தனது ட்விட்டரில் பகிர, குயில் ஷ்ரேயாவும் பாராட்டி மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.