த்ரிஷாவுக்கு கல்யாணம் இன்று நாளை .. என்று, நாட்கள்தான் நீள்கிறதே தவிர, எதுவும் நடந்தபாடில்லை. ஆனாலும், எங்கு என்ன நடந்து ஓய்ந்தாலும் அம்மணி நடிப்பில் முழுக்கவனத்தோடு இருக்கிறார். அத்தோடு, த்ரிஷா எங்கு சென்றாலும் அவரோடு கூடவே, நடிகர் ராணாவும் காணப்படுகிறார். கேட்டால், அவர் என் ''நண்பர்'' அவ்வளவுதான் அம்மணி உதிர்க்கும் பதில்.
இருவருக்கும் இடையில் ஒரு இது இருக்கு என, உலகமே பேசிகொண்டாலும், உறுதிப்படுத்த முடியாமல் பேச்சோடு நிற்கிறது அந்த பிரச்சினை.
சரி! நாங்க சொல்ல வந்த விசயத்துக்கு வருவோம்!
முக்கியமான பெரிய நடிகர்களின் படங்களை தன்வசப் படுத்துவதில் கைதேர்ந்தவர்
த்ரிஷா. பல தடவைகள் உறுதி செய்துமிருக்கிறார்.
அஜித்தின், ஜீ,கிரீடம்,மங்காத்தா என வரிசையாக 3 படங்களையும் கைப்பற்றி தானே நாயகியாக மாறிய அம்மணி, அதன் பிறகு கௌதம் மேனனின் புதிய தல 55இலும் அஜித் ஜோடியாகி விட்டார்.
இது மட்டுமா? விஜய்யோடு கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி என ஜோடியாகியவர் இப்பொழுது விஜயுடன் அடுத்த படத்தில் எப்படியும் தானே நடித்து விட வேண்டும் என தீவிரமாக இயங்கி வருவதாக தெரிகிறது.
அண்மையில் வெளியான கத்தி படத்தின் பாடல்கள் பற்றியும் இசையின் மகிமை பற்றியும் அனிருத்துக்கு வாழ்த்துக் கூறி தன் இணையப் பக்கத்தில் செய்தி பிரசுரித்திருக்கிறார்
த்ரிஷா. எனவே, இந்த முயற்சி, விஜய்யின் அடுத்த படத்தைக் கைப்பற்றும் ஒரு வலை விரிப்பு தான் என்கிறார்கள் தகவலறிந்தவர்கள்.