Grandpass tention - கிரேண்ட்பாஸில் ஏற்பட்ட பதற்ற நிலைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
2,587 Views
கொழும்பு - கிரேண்ட்பாஸ் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருட்களுடன் பெண் ஒருவரை கைது செய்ய சென்ற காவற்துறையினருக்கு எதிர்ப்பு தெரிவித்த நபர் ஒருவர் திடீரென பாதையில் வீழ்ந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காவற்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த பெண்ணை கைது செய்ய காவற்துறை குழு ஒன்று அங்கு சென்றுள்ளது.
அவர் கைது செய்யப்படுவதைத் தடுப்பதற்காக குறித்த நபர் கோசமெழுப்பி போராட்டம் நடத்தியவாறே, திடீரென வீதியில் விழுந்து உயரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அவரது மரணத்துக்கு காவற்துறையினரே காரணம் என்று தெரிவித்து பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
எனினும் நிலைமை பின்னர் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டதாக காவற்துறை ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.