ஷாருக்கானின் 8 pack உடலழகு பற்றி தெரியாதவர்களே இல்லை..
ஏதோ ஒரு வகையில் அண்மைய நாட்களில் அனைவராலும் பேசப்படும் விடயங்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது.
சரி, இப்போது விஷயத்துக்கு வருவோம்.. ஷாருக்கான், தீபிகா படுகோன், அபிஷேக் பச்சன் உள்ளிட்ட 'Happy New Year' எனும் இந்தி திரைப்பட குழுவினர் தங்களின் அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது Google மற்றும் டுவிட்டர் நிறுவனங்களின் பிரதான காரியாலயங்களுக்கு சென்றிருந்தனர்.
அப்போது இணையத்தளங்களில் நேரடியாக ஒரு சிறு உரையாடல் ஒன்றிற்கு முகம் கொடுத்த ஷாருக், தான் இந்த நாட்களில் ஒரு சொப்ட் வெயார் இன்ஜினியர் ஆகவேண்டும் என்று கனவு காண்பதாகவும், Google நிறுவனத்தில் தனக்கொரு வேலை வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். அத்தோடு திடீரென கெமராவிற்கு முன்னால் வந்து தன்னுடைய உடற்கட்டமைப்பினைக் காட்டி, இப்போது எனக்கு 8 pack எனவும் கூறி அதனையும் உறுதிப்படுத்தியிருக்கிறார், ஷாருக்கின் எயிட் பக்ஸ் பொய்யானது என ஒரு வதந்தி பரவி வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனை பார்த்து வியந்து மகிழ்ந்த டுவிட்டர் தளத்தின் பிரதானி டிக் கொஸ்டலோ ஷாருக்குடன் இணைந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டுள்ளார். இந்த சந்திப்பானது 'Happy New Year' திரைப்படத்திற்கு இலவசமான விளம்பரமாக அமைந்திருப்பதாகவும் திரையுலகினர் தெரிவிக்கின்றனர்.