4,855 Views
இம்மாதம் இந்தியாவுக்கு செல்லவுள்ள பங்களாதேஷ்‘ஏ’ அணி, ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.
இத்தொடரில் பங்கேற்கும் இந்தியா ‘ஏ’ அணியில் ரெய்னா, அம்படி ராயுடு, கோஹ்லி உள்ளிட்ட சில சிரேஷ்ட வீரர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நாட்களாக ஓய்வில் இருக்கும், ஒருநாள் தலைவர் தோனியும் விளையாட வாய்ப்பு இருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில் அடுத்த மாதம் இந்தியா செல்லவுள்ள தென் ஆப்ரிக்க அணி 3 சர்வதேச ‘டுவென்டி–20’, 5 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இத்தொடருக்கு பயிற்சியாக சில சிரேஷ்ட வீரர்கள் விளையாட உள்ளனர்.