Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
10
உலகளாவிய ரீதியில் பெறுமதி மிக்க விளையாட்டு வீரர்கள் பட்டியல் -MSD க்கு சரிவுநிலை.

Forbes' Most Valuable Athlete Brand List - உலகளாவிய ரீதியில் பெறுமதி மிக்க விளையாட்டு வீரர்கள் பட்டியல் -MSD க்கு சரிவுநிலை.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,274 Views
உலக விளையாட்டு வீரர்களில், விற்பனை மதிப்பு மிக்க வீரர்கள் பட்டியலை பிரபலமான Forbes சஞ்சிகை பட்டியலிட்டுள்ளது.

உலகத்தின் பலம் மிக்க அரச தலைவர்,உலகின் செல்வாக்கான நபர்,செல்வாக்கு மிக்க பெண்மணி,பெறுமதி மிக்க விளையாட்டு வீரர் என்ற அடிப்படையில் பலவகைகளில் இந்த சஞ்சிகை பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துகின்றமை வழமையே.

இம்முறை இவர்களது குறித்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய விளையாட்டு வீரர் MSD மட்டுமே. இவர் 5-வது இடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளார்.

அமெரிக்கக் கூடைப்பந்து வீரர் லீ பிரான் ஜேம்ஸ் முதலிடத்தை பிடிக்க,அடுத்த நிலையில் Golf  வீரர் டைகர் வூட்ஸ் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.

இந்த பெறுமதிமிக்க வீரர்கள் பட்டியலில் பிரபல டென்னிஸ் நட்சத்திரங்கள் சுவிஸ்லாந்தின் ரோஜர் பெடரர் மற்றும் ஸ்பெயினின் ரபேல் நடால் ஆகியோர் அடுத்தடுத்த மதிப்பு மிக்கவர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

ஆனால் MSDயின் பெறுமதி மதிப்பு 2014ஆம் ஆண்டு 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டில் 21 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.



இந்த பட்டியலில் முதலிடம் பிடித்த அமெரிக்கக் கூடைப்பந்து வீரர் லீ பிரான் ஜேம்ஸ்சின் பெறுமதி 21 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.

இதேவேளை பிரபல குறுந்தூர ஓட்ட வீரர் ஜமெய்காவின் உசேன் போல்ட் 6ம் இடத்திலும்,ரியல் மாட்ரிட் மற்றும் போர்த்துக்கல் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 7 ம் இடத்திலும்,ஆர்ஜெண்டின அணியின் தலைவரும் பிரபல பார்சிலோனா கழக வீரருமான லியோனல் மெஸ்ஸி 9 ம் இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top