கல்யாணம் பண்ணிக்கொண்டால் காலம் பூராகவும் மனைவி பிள்ளைகளை சுமக்க வேண்டுமே என்பது பல கணவன்மார்களின் மனக்குமுறல், ஆனாலும் கூட தன் குடும்பத்தை சுமந்துக் கொண்டு பல தடை தாண்டி ஓடுவது தான் வாழ்க்கையிலுள்ள சுவாரஷ்யமே!
இப்படியான வாழ்க்கை வாழ்வதற்கு கொடுக்கப்படும் பயிற்சி போலிருக்கிறது இந்த போட்டி.

ம்ம்..வட அமெரிக்காவில் தான் இந்த வித்தியாசமான போட்டி நடைபெறுகின்றது. தன் மனைவியை தோளில் சுமந்துக் கொண்டு, கரடுமுறடான பாதைகள், சேற்றுப்பாதைகள், பல தடைகளைத் தாண்டி ஓட வேண்டும், அது தான் போட்டி.
.jpg)
கணவன் மனைவிக்கிடையிலான அன்பு, பாசம், பொறுமை, என்பவற்றை சோதிக்கும் போட்டி என்று கூட சொல்லலாம். கடைசி வரை தன் மனைவியை சுமந்து கொண்டு போட்டித் தூரத்தைக் கடந்து முடிக்கும் தம்பதியினரே வெற்றியாளராக கருதப்படுவர். பெறுமதிமிக்க பரிசுகளும் இவர்களுக்கு உண்டு. இந் படங்களைப் பாருங்கள் போட்டி என்னவென்று உங்களுக்கே புரியும்.