அடுத்த முதல்வர் இளைய தளபதி .......???
"ரஜினி வேணாம் விஜய் போதும் என்கிறார்கள்"
இந்தியாவின் அரசியலில் மட்டுமல்லாமல்,தென்னிந்திய தமிழ் சினிமாவிலும் கூட ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு பெரும் பரபரப்பை உருவாக்கி வருகின்றது. கூடவே அரசியல் ஆசையுள்ள பிரபல நடிகர்களின் நாடித் துடிப்பையும் கூட எகிறவைத்துக் கொண்டிருக்கிறது.
தற்போது, ஜெயலலிதா சிறைக்கு சென்றுள்ளதால், மத்திய அரசான பா.ஜ .க எப்படியாவது தமிழகத்திலும் தமது ஆட்சியை கொண்டுவரும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.இந்தநிலையில் பா.ஜ.க வில் ரஜினியை இணைத்து அவரை அரசியலுக்கு கொண்டுவரும் முயற்சி எடுக்கப்படுவது எல்லோருக்கும் தெரியும்.
ஆனால் இதுவரை ரஜினி எந்தவித முடிவையும் சொல்லவில்லையாம்.

அத்தோடு,விரைவில் வரவிருக்கும் "லிங்கா" திரைப்படம் வெளியாகும்வரை அவர் அரசியலுக்கு வருவது போன்ற நிலையை ஏற்படுத்திவிட்டு, இன்னொரு படம் ஆரம்பிக்கும்போது அடுத்த படத்திற்கு சென்றுவிடுவார் என்று பா.ஜ. க வின் தமிழக தலைவர்கள் தெளிவடைந்துள்ளனராம். இதனால் தற்போது பாஜகவின் பார்வை நம்ம இளையதளபதி விஜய் மீது திரும்பியுள்ளதாம்.
தமிழகத்தின் பிரதான இரண்டு திராவிட கட்சிகளாலும் பாதிக்கப்பட்டவர், கோடிக்கணக்கான ரசிகர்களை தனது அன்பால் கட்டிப்போட்டவர், அத்தோடு இளைஞர்களின் பெரும்பான்மையான ஆதரவை பெற்றவர் என எழுந்துள்ள செய்திகளால் தற்போது பா.ஜ.க தலைவர்களின் பார்வை விஜய் மீது திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. எதிர்காலத் தமிழக முதல்வராகும் கனவில் இருக்கும் விஜய்யும், பாரதிய ஜனதா கட்சியின் முதல்வர் வேட்பாளர் "விஜய்" தான் என்று அறிவிக்க பா.ஜ.க தயார் என்றால் அரசியலில் குதிக்க தாம் தயாராக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, தீபாவளிக்கு "கத்தி" திரைப்படம் வெளியானவுடன், இளையதளபதி டெல்லி சென்று இதுகுறித்து பா.ஜ.க மேலிடத்தலைவர்களை சந்திக்கவுள்ளதாகவும்
செய்திகள் கசிந்துள்ளன.
அட போங்கப்பா,சூப்பர் ஸ்டார் இல்லன்ன என்ன......????
அதுக்குத்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்(?) என்று வலைவிரிக்கினம் போல.... விட்டுடுவம்.