Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
15
ஆபாசப் படம் எடுப்பவன் என்னும் அசிங்கப் பெயரை மாற்றுவேன் - சாமி

Samy wants to change his image - ஆபாசப் படம் எடுப்பவன் என்னும் அசிங்கப் பெயரை மாற்றுவேன் - சாமிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,629 Views
சீரழிந்து கொண்டிருக்கும் இன்றைய சமூகத்தின் ஒரு சில மனிதர்களையும் அவர்களின் சமூகப் பிறழ்வான நடத்தைகளையும் குணாதிசயங்களையும் வெளிக்காட்டும் சர்ச்சைக்குரிய படங்களான உயிர், மிருகம், சிந்துசமவெளி படங்களை இயக்கி மக்களிடையே எதிர்மறையான கருத்துக்களை சம்பாதித்துக் கொண்டவர் இயக்குனர் சாமி.

       சாமி என பெயர் வைத்துக்கொண்டு ஆசாமித்தனமான இயக்குனராக, முறையற்ற உறவுகளைச் சித்தரிக்கும் சமூகத்துக்கு ஏற்றதல்லாத படங்களை எடுப்பதாக அவர் மீது விமர்சனமும் எழுந்தது. வெளியில் மட்டுமல்லாது, வீட்டிலும் கூட எதிர்ப்பை எதிர்கொண்டிருந்தாராம் சாமி. "அந்தப் படங்கள் பற்றி என் அம்மாவே என்னைத் திட்டியிருக்கிறார். இனியாவது ஒழுங்காக நல்ல மாதிரியாக படம் பண்ணு "என்று சாமி கூறியிருக்கிறார். 



                                                                      இந்தநிலையில், சமூக பிறழ்வான கதைக்கருக்களை கைவிட்டு, தற்போது குடும்பப்பாசத்தை கையில் எடுத்திருக்கிறார் கதையாக. தற்போது "கங்காரு" என்ற படத்தை இயக்கும் அவர்,அதில் அண்ணன்,தங்கை பாசத்தை கதைக்கருவாக்கியிருக்கிறார். இதில் நாயகனாக நடிக்கும் அர்ஜுனா ஏற்கெனவே ‘மிருகம்’ படத்துக்காக சாமியால் தேர்வு  செய்யப்பட்டவராம்.ஆனால்,ஏதோவொரு காரணத்தால் அதில் ஆதியை நடிக்க வைத்தார். தற்போது இந்தக் கதைக்குப் பொருத்தமாகத் தோன்றியதால் அர்ஜுனாவை நடிக்க வைத்துள்ளார். இவரது தங்கையாக ஸ்ரீபிரியங்கா நடிக்கிறார். பாடகர் ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளராக அறிமுகமாகும் இந்தப்படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார்.இதில், வர்ஷா அஸ்வதி, தம்பிராமையா, கலாபவன் மணி, கஞ்சா கருப்பு, ஆர்.சுந்தர்ராஜன் என முக்கிய நடிகர்களும் கதையோட்டத்துடன் பயணிக்க இருக்கிறார்கள். 



                                                                                   நம் மண்ணில் இன்னமும் ஈரமும் பாசமும் வற்றிப்போய் விடவில்லை. இன்னமும் பாசமலர் அண்ணன் தங்கைகள் இருக்கவே செய்கிறார்கள். அம்மா பிள்ளை பாசமும் இருக்கவே செய்கிறது. இதற்கு ஏராளமான நிஜக்கதைகள் இருக்கின்றன. கங்காரு’ நவீன பாசமலர் என்று சொல்வேன். நிச்சயம் இது பேசப்படும். பாராட்டப்படும் எதுவும் மிகையில்லாதபடி சொல்லி இருப்பது நிச்சயம் எல்லாருக்கும் பிடிக்கும். இந்தப்படம் என்னை திட்டிய என் அம்மாவே பாராட்டும் படியாக இருக்கும் என சொல்கிறார் சாமி. 

        "நானும் பெரிய பெரிய இயக்குநர்கள் மாதிரி விதவிதமான கதைகளில் ரகம் ரகமான நிறங்களில் புதுப்புது படம் இயக்க வேண்டும் என்று நினைத்துதான் இங்கு வந்தேன்.யாருமே என்னை கவனிக்கவில்லை.என்னை மற்றவர்கள் கவனிக்க வேண்டும் என்பதற்காகவே இப்படியான படங்களை எடுத்தேன்.தற்போது எல்லோரும் என்னை கவனிக்கிறார்கள்.ஆனால் என்னுடைய பெயர் தான் கெட்டுப்போய்விட்டது. அதை மாற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறேன்" என மனம் திறக்கிறார் இயக்குனர் சாமி.
                                          
சாமி........!!!
நடக்கும் சமூகப்பிறழ்வுகளை தானே திரையில் வெளிச்சம் போட்டுக் காட்டினீர்கள், தப்பில்லை. "உண்மையை சொன்னால் உலகம் ஏற்பதில்லையே". தொடரட்டும் உங்கள் வெற்றிப்பயணம் தமிழ்த் திரையுலகில்............................................



Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top