10 கோடி குண்டு துளைக்காத காருக்கு சொந்தக்காரர் -ஷாருக் கான்ஷாரூக் கானின் உதவியாளரான ஆலி மொரானியின் வீட்டில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு துப்பாக்கிச் சூடு நடந்தது.
இதில் BMW கார் லேசாக சேதம் அடைந்தது. ஷாரூக் கானை குறி வைத்துத்தான் இந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது என்று காவல் துறையிடம் வாக்குமூலம் கொடுத்தார் அவர் உதவியாளர்.
இதனடிப்படையில் தனக்கு ஆபத்து ஒன்று இருப்பதை கணித்த நடிகர் ஷாருக் கான் 10 கோடி (Bomb proof ) குண்டு துளைக்காத காருக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் ஷாருக்.
இவரது சொத்து மதிப்பு 600 பில்லியன் டாலர்கள். இந்தியாவில் நேர்த்தியாக வரி கட்டும் நடிகர்களில் ஷாருக் கானும் ஒருவர்.
நடிகர்+ தயாரிப்பாளர்+ விளம்பர நடிகர், IPL கொல்கொத்தா அணியின் உரிமையாளராகவும் இருக்கும் ஷாருக் அதிகம் சம்பாதிக்கும் நடிகர்கள் வரிசையிலும் முன்னணியில் இருப்பவர்.
ஏற்கனவே அமீர் காணும் இதே வகை காரை அண்மையில் கொள்வனவு செய்தமை குறிப்பிடத்தக்கது.
2 முறை IPL கிண்ணங்களை வெற்றி கொண்டுள்ள காம்பிர் தலைமையிலான KKR அணிக்கு பரிசுத்தொகையாக இந்த ஆண்டு மட்டும் 15 கோடி கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
இப்படி கோடான கொடிகள் கொட்டி புரளும் IPL அணியின் உரிமையாளராக இருக்கும் ஷாருக்குக்கு இதெல்லாம் ஜுஜுப்பி.