பொழுதுபோக்கு முதல் கல்வி வரை, அனைத்து விதமான Videoக்களையும் பார்க்கவும், பதிவேற்றம் செய்யவும் கோடிக்கணக்கானவர்கள் இந்த YouTube ஐ நாடி வருகின்றனர்.
2005 ஆம் ஆண்டு, ஸ்டீவ் சென், சந்த் ஹர்லி மற்றும் ஜாவித் கரீம் ஆகிய தொலைநோக்கு சிந்தனையாளர்களால் YouTube உருவாக்கப்பட்டது.
அந்த ஆண்டின் ஏப்ரல் 23 ஆம் திகதி, YouTube தளத்தில் முதல் Video பதிவேற்றப்பட்டது.
ஆரம்பத்தில் ஒரு எளிய Video பகிர்வுத் தளமாக தொடங்கப்பட்ட YouTube , இன்று உலகளாவிய சமூக வலைத்தளமாகவும், Video Streaming சேவையாகவும் பிரம்மாண்டமாக வளர்ந்துள்ளது.
YouTube தனது 20ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடி வரும் இந்தத் தருணத்தில், ஒரு வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளது.
இதுவரை இந்தத் தளத்தில் பதிவேற்றப்பட்ட Videoக்களின் எண்ணிக்கை 20 பில்லியனைத் தாண்டியுள்ளது.
இது YouTube இன் அபரிமிதமான வளர்ச்சியையும், உலக மக்கள் மத்தியில் அதற்கு இருக்கும் பேராதரவையும் தெளிவாக உணர்த்துகிறது. உலகம் முழுவது சுமார் 2.7 பில்லியன் மக்கள் YouTube ஐ பயன்படுத்தி வருகின்றனர்.