தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகரான தனுஷ், தற்பொழுது இயக்குநர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் "குபேரா" எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் தனுஷின் 51ஆவது திரைப்படமாகும்.
இந்தத் திரைப்படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ரஷ்மிகா, Jim Sarbh உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் எதிர்வரும் June மாதம் 20ஆம் திகதி வெளியாகவுள்ளது.
இதற்கிடையில் திரைப்படத்தின் Teaser மற்றும் பாடல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த நிலையில், "குபேரா" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா June மாதம் முதலாம் திகதி இடம்பெறும் என்று திரைப்படக்குழு அறிவித்துள்ளது.