சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் அண்மையில் 'Tourist Family' திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு சசிகுமாருக்கு மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக இது அமைந்துள்ளது.
'Tourist Family' திரைப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து, அடுத்ததாக சசிகுமார்`Freedom' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத் திரைப்படத்தில் நடிகை லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார்.
'கழுகு', 'சவாலே சமாளி' போன்ற திரைப்படங்களை இயக்கிய சத்யசிவா இயக்கும் இந்தத் திரைப்படம் இலங்கை அகதிகள் இருவர், தவறு செய்யாமல் சிறைச்சாலையில் சிக்கிக்கொண்டு பின் அங்கிருந்து தப்பித்துச் செல்வது போன்ற கதைக்களத்தில் அமைந்துள்ளது.
ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தத் திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதி வெளியாகின்றது. இந்நிலையில், திரைப்படத்தின் Teaser தற்பொழுது வெளியாகியுள்ளது.