SooriyanFM Gossip - தேசிய அரங்கில் பிரகாசித்த வீர,வீராங்கனைகளுக்கு கெளரவம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
138 Views
தேசிய அரங்கில் பிரகாசித்த கண்டி மாவட்டத்தினைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களை கெளரவிக்கும் வருடாந்த நிகழ்வில், இளம் வீர,வீராங்கனைகள் பலர் கெளரவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2024ஆம் ஆண்டு சர்வதேச அரங்கில் சாதித்த வீர, வீராங்கனைகளே இந்த நிகழ்வின் ஊடாக கெளரவிக்கப்பட்டதோடு, இந்த நிகழ்வு இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) ‘Cricket Gamata’ செயல் திட்டத்தின் ஒரு அங்கமாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த நிகழ்வில் இலங்கை கனிஷ்ட கிரிக்கெட் அணிக்காக விளையாடிய தர்மராஜ கல்லூரி வீரர் புலிந்து பெரேரா, மஹமாய கல்லூரி வீராங்கனை அஷேனி தலகுனே ஆகியோர் கெளரவிக்கப்பட்டனர்.