கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவான 'தக் லைஃப்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இரசிகர்களின் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் சிம்பு , த்ரிஷா, அபிராமி, ஜோஜு ஜோர்ஜ், அசோக் செல்வன், நாசர் என முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.
இசைப்புயல் A.R.ரஹ்மான் இசையமைத்த இத்திரைப்படத்தின் பாடல்கள் எல்லாமே நல்ல வரவேற்பைப்பெற்றன. அதிலும் இத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் ஸ்ருதி ஹாசன் பாடிய பாடல் நல்ல வரவேற்பையும் பாராட்டுகளையும் அவருக்குப் பெற்றுக்கொடுத்தது.
அத்துடன், இத்திரைப்படத்திற்காக இடம்பெற்ற 'முத்தமழை' எனும் பாடலை பாடகி சின்மயி மேடையில் பாடிய நிலையில் எல்லோருடைய இரசனைக்கும் விருந்தாகியது அந்தப்பாடல். ஏற்கனவே பாடகி தீ 'முத்த மழை’பாடலைப் பாடியிருந்தாலும் சின்மயி பாடிய விதம் எல்லோரையும் வெகுவாகக் கவர்ந்திருந்தது. இதேவேளை திரைப்படத்தில் இந்தப்பாடலின் காட்சியைக் காண ஆவலோடு போன இரசிகர்களுக்கு இத்திரைப்படத்தில் குறித்த பாடல் இடம்பெறாதமையினால் ஏமாற்றம் நேர்ந்துள்ளது. இதனால் இரசிகர்கள் அவர்களுடைய அதிருப்தியை இப்போது வெளிப்படுத்தி வருகின்றனர்