"கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ" போன்ற திரைப்படங்களை இயக்கி இரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
இவர் தற்போது ரஜினியை வைத்து 'கூலி' திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கின்றார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்தத் திரைப்படமானது August மாதம் 14ஆம் திகதி வெளியாகவுள்ளது.
இந்தத் திரைப்படத்தில் நாகர்ஜுனா, உபேந்திரா, சோபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன் என பல நட்சத்திர பட்டாளங்களே நடித்துள்ளனர். மேலும் Bollywood நடிகர் அமீர்கான் ரஜினியின் கூலி திரைப்படத்தில் ஒரு சின்ன Guest Role இல் நடித்துள்ளார்.
இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமீர்கான், கூலி திரைப்படத்தில் தனது Role குறித்து பேசியுள்ளார். அதாவது, 'கூலி திரைப்படத்தில் என்னுடைய கதாபாத்திரம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். அந்த கதாபாத்திரம் அனைவருக்கும் பிடிக்கும்' எனக் கூறி இருக்கிறார்.