கடந்த ஆண்டு "மகாராஜா" மற்றும் "விடுதலை 2" ஆகிய இரண்டு ஹிட் திரைப்படங்களை கொடுத்த விஜய் சேதுபதி, அடுத்ததாக "தலைவன் தலைவி" திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் இணைந்து நடித்துள்ளனர். "தலைவன் தலைவி" திரைப்படத்தைத் தொடர்ந்து, விஜய் சேதுபதி நடித்து வரும் புதிய திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகநாத் இயக்கி வருகிறார்.
நடிகை சார்மி கவுர், பூரி ஜெகநாத் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில், திரைப்படத்தின் கதாநாயகி குறித்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளிவராமல் இருந்தது. இந்த நிலையில், பிரபல நடிகை சம்யுக்தா மேனன் இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதாக அறிவித்துள்ளனர்.
மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ள சம்யுக்தா, தமிழில் தனுஷின் "வாத்தி" திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது "பென்ஸ்" திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.