இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜொஃப்ரா ஆர்ச்சர் இடம் பெற்றுள்ளார்.
முன்னதாக கடந்த 2021ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய அவர், அதன்பின் முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு மேல் டெஸ்ட் அணியில் இடம்பெறாமல் இருந்தார்.
ஆனால், தற்போது காயத்தில் இருந்து முழுமையாக மீண்டுள்ள அவர் இங்கிலாந்தின் ஒருநாள், T20 அணிகளில் இடம்பிடித்ததுடன் சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி இருந்தார்.
இதன் காரணமாக நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்ச்சர் மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளார்.