மாரி செல்வராஜ் இயக்கத்தில் இரு வேறு சாதியினருக்கு இடையே உண்டாகும் காதலையும், அதனால் வெளிப்படும் சமூகத்தின் கொடூர முகத்தையும் வெளிப்படையாக பேசி வரவேற்பைப் பெற்ற திரைப்படம் 'பரியேறும் பெருமாள்'.
2018ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தின் மூலம் மாரி செல்வராஜ் இயக்குநராக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக திகழ்கிறார். இந்நிலையில்தமிழில் வெளியான இத்திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை கரண் ஜோஹரின் தர்மா புரொடெக்சன் நிறுவனம் வாங்கியது. இதேவேளை பரியேறும் பெருமாள் திரைப்படம் ஹிந்தியில் 'தடக் 2' என்ற பெயரில் உருவாகியுள்ளது.
இத்திரைப்படத்தில் சித்தாந்த் சதுர்வேதி, திரிப்தி திம்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எதிர்வரும் ஒகஸ்ட் 1ஆம் திகதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்ததனையடுத்து தற்போது இத்திரைப்படத்தின் Trailer வெளியாகியுள்ளது.