'உள்ளம் கேட்குமே' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூஜா.
'அட்டகாசம்', 'ஜே.ஜே', 'நான் கடவுள்', 'ஓரம்போ' என பல திரைப்படங்களில் நடித்த பூஜா, தமிழ்த் திரைப்படங்களைத் தாண்டி தெலுங்கு, மலையாளம் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த நடிகை பூஜா, 2016ஆம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த தொழில் அதிபர் பிரசான் டேவிட் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவிலிருந்து விலகி, தன் கணவருடைய தொழிலைக் கவனித்து வந்தார்.
இந்த நிலையில், மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 2 இயக்குநர்கள் நடிகை பூஜாவிடம் கதை கூறியுள்ளார்களாம்.
கதையும் பூஜாவிற்குப் பிடித்துப் போனதால் விரைவில் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகை பூஜா மீண்டும் சினிமாவுக்கு நடிக்க வருவது இரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. 44 வயதிலும் அவரது அழகு குறையவில்லை என பாராட்டு தெரிவித்தும் வருகிறார்கள்.