ஹிந்தியில் நடிகர் தனுஷ் அறிமுகமான 'ராஞ்சனா' திரைப்படம் கடந்த 2013ஆம் ஆண்டு இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியானது.
இசைப்புயல் A.R.ரஹ்மானின் இசையில் உருவான இத் திரைப்படம் தமிழில் 'அம்பிகாபதி' எனும் பெயரில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்தது.
இரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த இத் திரைப்படத்தை 12 வருடங்களுக்குப் பிறகு AI மூலம் இறுதிக்காட்சியை மாற்றி கடந்த 1ஆம் திகதி Re-Release செய்தனர்.
இந்த AI மாற்றம் குறித்து நடிகர் தனுஷ் தனது X தளப் பக்கத்தில் "இது நான் 12 ஆண்டுகளுக்கு முன் சரி என்று சொன்ன 'ராஞ்சனா' திரைப்படம் இல்லை. இந்த Re-Release குறித்து என்னிடம் எதுவும் கேட்கப்படவில்லை. எனது படைப்பை அவமரியாதை செய்து விட்டார்கள். நான் இதை எண்ணி மன உளைச்சலில் உள்ளேன். இந்த மாற்றம் புதுமையல்ல அவமானம்" என்று தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
இதற்கு முன் 'ராஞ்சனா' திரைப்படத்தின் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இந்த AI மாற்றத்திற்கு தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.