நடிகர் கவின் ' நட்புன்னா என்னானு தெரியுமா? ' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து வெளியான 'லிப்ட்' , 'டாடா' திரைப்படம் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. கடைசியாக கவின் நடித்திருந்த 'பிளடி பெக்கர்' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
தற்போது கவின் 'கிஸ்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை நடன இயக்குநர் சதீஷ் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் நடிகை பிரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார்.
இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு , ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், இத்திரைப்படத்தின் Release குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.
அதன்படி, இத்திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 18 ஆம் திகதி வெளியிடப் திரைப்படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.