நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'கூலி'.
இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் இம்மாதம் 14ஆம் திகதி வெளியாகவுள்ளது.
இத்திரைப்படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தின் Premier காட்சிக்கு வட அமெரிக்காவில் 50000 ற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் நேற்று 50 ஆயிரத்திற்கும் மேல் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டிலும் முன்பதிவு நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது.
'கூலி 'திரைப்படம் முன்பதிவுகளில் மாத்திரமே பல கோடிகள் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.