சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘பராசக்தி’ .அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இத்திரைப்படத்துக்கு GV.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் ஹிந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஜனவரி 10ஆம் திகதி ‘பராசக்தி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையில் ‘பராசக்தி’ திரைப்படத்தில் இருந்து பாடல் மற்றும் டீசர் வெளியாகி திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது. முதல் பாடலான "அடி அலையே..." , இரண்டாவது பாடலான "ரத்னமாலா..." என்பன இரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இது GV.பிரகாஷ் இசையமைக்கும் 100வது திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.இதன் போது ‘பராசக்தி’ திரைப்படத்தின் Trailer இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் தற்போது Trailer வெளியாகியுள்ளது.