'அம்பாசமுத்திரம் அம்பானி', 'நெடுஞ்சாலை' படங்களின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் கென் கருணாஸ்.
இவர் தொடர்ந்து 'அசுரன்', 'விடுதலை-2' ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். மேலும் , நடிகர் தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' திரைப்படத்தில் உதவி இயக்குநராகவும் பணியாற்றி உள்ளார்.
தற்போது , இவர் இயக்கிய முதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத் திரைப்படத்தில் , சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் ஸ்ரீதேவி, அனிஷ்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
கென் கருணாஸ் இயக்கி, நடித்துள்ள இந்த புதிய திரைப்படத்திற்கு 'யூத்' எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக திரைப்படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது