தமிழ் ஆன்மிக இலக்கியத்தின் மகத்தான படைப்பான திருவாசகம் பாடலின் ஒரு பகுதியை, சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார் அரங்கேற்றினார்.
ஜி.வி. பிரகாஷின் குரலும் இசையும், திருவாசகத்தின் ஆழ்ந்த பக்தி உணர்வை சமகால இசை மொழியில் வெளிப்படுத்தியது மெய்சிலிர்க்க வைத்தது.
திருவாசகத்தை முழுமையான இசை ஆல்பமாக உருவாக்க வேண்டும் என்பது ஜி.வி. பிரகாஷின் நீண்ட நாள் கனவு.
அந்த கனவின் முதல் படியாக, தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளுக்கு இசையமைத்து, அவற்றை உலகிற்கு கொண்டு சேர்க்கும் முயற்சியில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்த முயற்சியின் தொடக்கமாக, மோடி முன்னிலையில் பாடப்பட்ட திருவாசகத்தின் முதல் பாடல் எதிர்வரும் 22 ஆம் திகதி ஜி.வி. பிரகாஷ் தனது யூடியூப் சேனலில் அதிகாரப்பூர்வமாக வெளியிடவுள்ளார்.
இந்தப் பாடல், ஆன்மிக இசை இரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.