இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'D55' திரைப்படத்தை தனுஷின் வுண்டர்பார் ஸ்டுடியோ தயாரிக்கிறது. இந்தத் திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாக சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.
மேலும், 'D55' திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்கிறார் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டது.
இந்நிலையில், 'D55' திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
அதன்படி இந்தத் திரைப்படத்தில் தனுஷூக்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ரீலீலா கதாபாத்திரம் பற்றிய அறிவிப்பு இன்று மாலை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.