பொலிவுட் திரையுலகில் கடந்த ஆண்டு வெளியாகி வசூலில் சாதித்து வரும் திரைப்படங்களில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது ‘துரந்தர்’. இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங் கதாநாயகனாக நடித்த இந்தத் திரைப்படம், திரையரங்குகளில் மட்டுமல்லாமல் தற்போது OTT தளங்களிலும் சாதனை படைத்து வருகிறது.
இத்திரைப்படத்தில் அக்ஷய் கன்னா, மாதவன், அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத் ஆகியோர் நடித்திருந்தனர். இந்தநிலையில் இத்திரைப்படம் உலகளவில் இந்திய மதிப்பில் ரூ. 1250 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், Non-English Movies என்கிற வகையில் இத்திரைப்படம் உலகளவில் முதலிடத்தில் உள்ளது. அத்துடன் 11 நாடுகளில் முதலிடத்திலும், 25 நாடுகளில் Top 10 இல் இடம்பெற்றுள்ளது.