வறண்ட பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கையையே மாற்றியமைக்கும் கண்டுபிடிப்பை நோபல் பரிசு பெற்ற ஓமர் யாகி நிகழ்த்தியுள்ளார்.
காற்றில் ஈரப்பதம் 20%க்கும் குறைவாக உள்ள மிக வறண்ட பாலைவன பகுதிகளிலும், காற்றிலிருந்து நேரடியாக ஒரு நாளைக்கு 1,000 லிட்டர் வரை தூய்மையான குடிநீரை எடுக்கும் புதிய கருவியை அவர் உருவாக்கியுள்ளார்.
அவர் தனது வேதியியல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, 'ஷிப்பிங் கன்டெய்னர்' (Shipping Container) அளவிலான நடமாடும் நீர் சேகரிப்பு அமைப்பை உருவாக்கியுள்ளார்.
இது மின்சாரத் தொடர்பு இல்லாத தொலைதூரப் பகுதிகளிலும் தன்னிச்சையாக இயங்கும் திறன் கொண்டது.
இந்தக் கருவி இயங்க அதிகப்படியான மின்சாரம் தேவையில்லை.
உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாத தொலைதூரப் பாலைவனங்கள் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை உள்ள இடங்களுக்கு இது மிகச்சிறந்த தீர்வாகும்.