தளபதி விஜய் நடிக்கும் இறுதித் திரைப்படமான 'ஜனநாயகன்' திரைப்படமானது ஜனவரி 9ஆம் திகதி வெளியாகுமெனக் காத்திருந்த இரசிகர்களுக்கு, தற்போது வரை இத்திரைப்படம் வெளியாகாதது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்து வருகிறது.
தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாத இழுபறி நிலையால் தாமதமாகும் 'ஜனநாயகன்' திரைப்படத்திற்குத் தற்சமயம் புதிய சிக்கலொன்று உருவாகியுள்ளது.
இந்திய மதிப்பில் ரூ.120 கோடி கொடுத்து 'ஜனநாயகன்' திரைப்படத்தை வாங்கிய OTT நிறுவனம், தற்போது அந்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.