காதலை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் திரைப்படம் 'Vowels'. ஆங்கிலத்தில் உள்ள A,E,I,O,U என்கிற வௌவல்ஸ் எழுத்துகளின் பின்னணியில் ஐந்து கதைகளாக திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர்.
யூகி சேது, சின்னி ஜெயந்த், ராஜ் ஐயப்பா, சம்யுக்தா விஸ்வநாதன், நண்டு, தீபக் ரமேஷ், பரமேஷ், காஜல் செளத்ரி, பீட்டர்.கே, சரத் ரவி, அக்ஷிதா போபையா, பிரியங்கா சந்திரசேகர், பரத் போபண்ணா, விஜிதா வசிதா உள்ளிட்ட ஐந்து கதைகளில் நடித்திருக்கும் அனைத்து நடிகர், நடிகைகளும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள். யூகி சேதுவின் வேடமும்,பேசும் வசனங்களும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன.
5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் 5 குறுந் திரைப்படங்களை ஒன்றாக்கி ஒரு முழு நீளத் திரைப்படமாக உருவாகியிருக்கிறது 'Vowels' திரைப்படம் .மேலும் தொடக்கம் மற்றும் முடிவு என்று குறிப்பிட்ட நேரத்திற்குள் தாங்கள் சொல்ல வேண்டிய விசயங்களை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்கள்.
ஐந்து கதைகளுக்கும் .சரவண சுப்பிரமணியம் இசையமைத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.