10 அணிகள் பங்கேற்கும் 19ஆவது ஐ.பி.எல். தொடர் 28 ஆம் திகதி முதல் மே 31ஆம் திகதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர். ஒவ்வொரு அணி தொடர்பான புதிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக அயர்லாந்து அணியின் முன்னாள் சகலதுறை வீரர் ஜான் மூனி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.பி.எல். போட்டி அணியின் பயிற்சியாளர் குழுவில் அயர்லாந்தை சேர்ந்த வீரர் இடம்பெறுவது இதுவே முதல்முறையாகும்.