இலங்கை சினிமா வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய Hiru Golden Film Awards 2014
விருது வழங்கல் விழா கோலாகலமாக நேற்று முன்தினம் சுகததாச உள்ளக அரங்கில் நடந்தேறியது.
நம் நாட்டு பிரபலங்கள் பலரோடு, தென்னிந்திய பொலிவூட் நட்சத்திரங்களான பிபாஷா பாசு, அனில் கபூர், சுனில் செட்டி, விவேக் ஓப்ராய் மற்றும் நேஹா துபியா, பிரபல பாடகி அல்கா யக்னிக் ஆகியோர் இதில் பங்குபற்றியிருந்தனர்.
இவ்விழாவில் 2012 – 2013 ல் வெளிவந்த 100 திரைப்படங்களை தரப்படுத்தி அதிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட சிறந்த திரைப்படம், இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், நடிகை, பாடகர், பாடகி, துணை நடிகர் என பல விருதுகள் வழங்கப்பட்டது.
இதில் சிறந்த திரைப்படம் எனும் பெருமையையும், விருதையும் 'இனி அவன்' திரைப்படம் பெற்றுக்கொண்டது. சிறந்த இயக்குனர் விருது இப்படத்தை இயக்கிய அஷோக ஹந்தகம பெற்றுக்கொண்டார். சிறந்த நடிகர் விருதை இப்படத்தில் தன் நடிப்புத் திறமையால் கலக்கியிருந்த தர்ஷன் தர்மராஜ் பெற்றுக்கொண்டார்.

மேலும் 'நிகினி வெஸ்ஸ' திரைப்படத்தில் நடித்த 'சாந்தனி செனவிரத்ன' விற்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது.
மேலும் நம் நாட்டு நடிகை நிரஞ்சனிக்கு சிறப்பு விருதும் கிடைத்தது.

இதுதவிர மேலும் பல பிரபலங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
விருதுகளை வென்ற தமிழ் பேசும் இந்தக் கலைஞர்களுக்கு சூரியனின் வாழ்த்துக்கள்.
இதுவரைக் காலமும் இலங்கையில் நடைப்பெற்ற விருது வழங்கல் விழாக்களில் Hiru Golden Film Awards 2014 ஆனது
மிக பிரம்மாண்டமான விருது வழங்கல் விழா என்றால் அது மிகையாகாது.
முழுமையான விழா புகைப்படங்கள்..
Hiru Golden Film Awards 2014 | The Event - Album 1Hiru Golden Film Awards 2014 | The Event - Album 2