உலகிலேயே அதிக வயதானவர் என கின்னஸ் சாதனை ஏட்டில் பதிவாகியிருந்த ஜப்பான் நாகோயா நகரத்தில் வசித்து வந்தவர் இன்று காலமானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1903 மார்ச் 13ஆம் திகதி பிறந்த இவர் தமது 112வது வயதில் இன்று மாரடைப்பு காரணமாக மரணமாகியுள்ளார்.
கடந்த ஓகஸ்ட் மாதம் கின்னஸ் சாதனை ஏட்டில், யசுறாரோ கொயிட் என்ற இவரே உலகளாவிய ரீதியாக அதிக வயதில் உயிர் வாழ்பவர் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அப்போது, அவர் அளித்த செவ்வி ஒன்றில், தமது நீண்ட கால ஆயுளுக்கான காரணத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
தமது வாழ்நாளில் புகை பிடிக்கவோ அல்லது மது அருந்தவோ இல்லை என தெரிவித்ததுடன், மகிழ்ச்சியாகவே அனைவருடன் இருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, உலகில் அதிக வயதை கொண்டவர் என்ற சாதனை பிரான்சைச் சேர்ந்த ஜூன் கல்மன்ற் பெற்றிருந்தார்.
இந்த அம்மையார் கடந்த 1997 ஓகஸ்ட் மாதம் தமது 122வது வயதில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.