கையடக்க தொலைபேசியை பயன்படுத்தும் போது தலையை குனிந்து பார்ப்பதை தவிர்க்க வேண்டும் கையடக்க தொலைபேசியை உங்களது கண் மட்டத்திற்கு நேராக உயர்த்திப் பிடிக்க வேண்டும். இதனால் கழுத்து மற்றும் முதுகு வலி ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
கையடக்க தொலைபேசியின் திரையை உங்களது கண்களில் இருந்து குறைந்தது 12 முதல் 14 அங்குலங்கள் தூரத்தில் வைத்திருக்க வேண்டும். தொடர்ந்து திரையைப் பார்ப்பதால் ஏற்படும் கண் எரிச்சலைத் தவிர்க்க, ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒருமுறை, 20 அடி தூரத்தில் உள்ள ஒரு பொருளை, 20 வினாடிகள் பார்க்க வேண்டும்.
தூங்குவதற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு கையடக்க தொலைபேசியை பயன்படுத்துவதை நிறுத்திவிட வேண்டும். அதிலிருந்து வரும் நீல நிற ஒளி உங்களது தூக்கத்தைப் பாதிக்கும்.
நீண்ட நேரம் தொலைபேசியில் பேசும் போது கையடக்க தொலைபேசியை நேரடியாக காதில் வைப்பதைத் தவிர்த்து Earphones அல்லது Speakerஐ பயன்படுத்துவது நல்லது.
தூங்கும் போது கையடக்க தொலைபேசியை தலைக்கு அருகிலோ அல்லது தலைவணைக்கு அடியிலோ வைக்கக் கூடாது. அதிலிருந்து வரும் கதிர்வீச்சு மற்றும் வெப்பம் உடலுக்குப் பாதுகாப்பானது அல்ல.