Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
03
கண் மூடும் நேரமும் நம் முன்னே வந்து போகும் மண் மூடிய மலையக வரலாறு .

koslanda-landslide - கண் மூடும் நேரமும் நம் முன்னே வந்து போகும் மண் மூடிய மலையக வரலாறு .Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,620 Views
கண் மூடும் நேரமும் நம் முன்னே வந்து போகும் மண் மூடிய மலையக வரலாறு .

இயற்கையின் கோரத்தாண்டவதுக்கு இலக்காகி இயல்பு நிலை இழந்து இதயங்களை பதைபதைக்க வைத்த இலங்கையின் மலையக மண்ணின் கொஸ்லாந்தை,மீரியபெத்த மக்களின் துயர வரலாறு மலையைக் மக்களின் வாழ்வியல் துன்பங்களில் ஓர் அத்தியாயம் மட்டுமே.

இலங்கையின் வனப்பு மிகு இடமாகவும் சுற்றுலாப் பயணிகளின் சுவர்க்க பூமியாகவும் திகழும் மலையகத்தின் அழகை மட்டுமே பார்த்து ரசித்த நம்மவர்கள் அழகுக்கு பின்னால் இருந்த ஆபத்தை கண்டுகொள்ளாமல்  விட்டதுதான் வேதனையான ஒன்றாகிவிட்டது.

காலதிகாலமாய் கல்வியறிவின்றி,கண்ணீரில் காவியம் படைத்த மலையக மக்களின் வரலாறு என்பது இந்தக் காலகட்டத்து இளைஞர்களுக்கு ஓர் படிப்பினையாகவும் இதுவே இனிவரும் நாட்களிலும் தொடர்கதையாகியும் விடக்கூடாது என்பதற்காகவே இந்திய இணையமொன்றில் படித்தவற்றைக் கொண்டு தொகுத்து தருகின்றோம்.

                   

அது தமிழக வரலாற்றில் கொடூரமான காலகட்டம் 1835-40. நிலப்பிரபுத்துவ முறை, சாதிக் கொடுமைகள், கோரப் பஞ்சம், துரத்தும் வறுமை.

பல்லாயிரக் கணக்கானோர் பசியால் உயிர்துறந்த காலகட்டம். இந்த காலகட்டத்தை வசமாக பயன்படுத்துவதற்கு ஆங்கிலேயர்கள் எண்ணம் கொண்டனர்.

இந்தியாவையும் இலங்கையையும் ஆண்ட அவர்கள், இலங்கையில் தங்களால் நடத்தப்பட்ட கோப்பி , தேயிலை, ரப்பர் தோட்டங்களுக்கு தேவையான தொழிலாளர்களை எப்படி பெற்றுகொள்வது என்று திண்டாடிய நேரத்தில் வசமாய் அவர்கள் முன் மாட்டிகொண்டவர்களே இந்த மலையக வம்சாவளிகள்.

நல்ல வேலை, நல்ல சாப்பாடு, நல்ல கூலி என்று ஆசை காட்டி கொஞ்சம் பணத்தை முற்பணமாகக் கொடுத்து வேலைக்கு தேவையானவர்களை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து செல்வதுதான் இவர்களது குறிக்கோள்.

இந்த அப்பாவி ஏழைகள் தனுஷ்கோடி வரை கால்நடையாகவே நடத்திச் செல்லப்பட்டார்கள்.அங்கிருந்து தோணிகள் மூலம் கடல் கடந்து, மீண்டும் கால்நடையாகவே இலங்கையின் தோட்டங்களுக்கு நடத்திச் செல்லப்பட்டனர்.

               

இவ்வாறு  ஆங்கிலேயர்களின் ஆசை வார்த்தைக்குள் அகப்பட்டு
நடைப்பயணத்தின்போதே பலர் இறந்து போயினர். பணத்தாசையின் காரணமாக, கங்காணிகள் 100 பேரை ஏற்ற வேண்டிய தோணிகளில் 500 பேர், 1,000 பேர் வரை ஏற்றிச் சென்றதால் கனவுகளோடு பயணித்த இவர்கள் வாழ்க்கை கடல் நடுவே கண்ணீரோடு காவியமானது.

இப்படி ஆயிரக் கணக்கான ஏழைத் தமிழர்களுடன் பயணித்த ‘ஆதிலட்சுமி' கப்பலும் கரைசேர்வதற்கு முன்பாகவே கடலில் மூழ்கியது. 1841-49-க்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் 70 ஆயிரம் தமிழர்கள் இப்படிப் பலியானதைப் பதிவுசெய்திருக்கிறது ‘கொழும்பு அப்சர்வர்' பத்திரிகை.

இங்கிருந்து சென்றவர்கள் கண்டி, ஹட்டன், மாத்தளை, புசல்லாவ, நுவரேலியா என மலையகத்தின் அழகுக்கு அத்திவாரம் கொடுக்கும் முனைப்பில் பல்வேறு இடங்களிலும் அடர்வனங்களைத் திருத்திப் பெருந் தோட்டங்களாக மாற்றியமைத்தார்கள்.

மலைகளில் போக்குவரத்துக்காக வீதிகளை  உருவாக்கினார்கள். சுரங்கங்களை வெட்டி ரயில் பாதை உருவாக்கினார்கள். கடுங்குளிரிலும் பனியிலும் ஓயாத மழையிலும் அட்டை, பூரான்களின் அவஸ்தைகளுக்கு மத்தியில் ஒரு நாளுக்கு  12 மணி நேரம் வரை உழைத்தார்கள். ஆனால், இவர்கள் வாழ்நிலையோ குரூரமான கொத்தடிமைகளின் நிலையிலேயே இருந்தது.

         

தனிமனித சுதந்திரமோ,தொழிலாளர் உரிமைகளோ அன்றி ஆங்கிலேயரின் ஆசை வார்த்தைகளை நம்பி அல்லும் பகலும் அடிமைகளாய் சொல்லொன்னா துயரங்களை சந்திக்க ஆரம்பித்தார்கள்.

இலங்கையின் பொருளாதாரத்தைத் தங்கள் தோளில் சுமக்க ஆரம்பித்தார்கள்.நாட்டின் பொருளாதாரத்தையே தங்கள் தோள்களில் சுமக்க ஆரம்பித்தவர்களை வந்தேறு குடிகளாய் நோக்க ஆரம்பித்தார்கள் இலங்கையின் ஏனைய பகுதி மக்கள்.

இந்த நிலையில் ஆங்கிலேயர்களால் அங்கிருந்து அழைத்துவரப்பட்ட இந்திய வம்சாவளித் தமிழர்கள் 1935 காலகட்டத்தில் அநீதிகளை எதிர்த்துப் போராட்டத்தில் இறங்கினர்.

இலங்கையிலிருந்து மலையகத் தமிழர்களைத் கண்டுகொள்ளாத அரசு, ஒருகட்டத்தில் 10 லட்சம் மலையகத் தமிழர்களை நாடற்றவர்களாக ஆக்கியது. ஏறத்தாழ 130 ஆண்டுகளாக இலங்கைக்காக உழைத்தவர்கள் நாடற்ற நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இந்த 10 லட்சம் பேரையும் இந்தியாவுக்கு அனுப்ப முயன்றது இலங்கை. இந்தியாவோ ஏற்க மறுத்தது. ஒருகட்டத்தில் வேறு வழியில்லாமல், கிட்டத்தட்ட ஆளுக்குப் பாதி என்பதுபோல, இரு அரசுகளும் ஒரு ஒப்பந்தத்தைச் செய்தன. இதன்படி 5.25 லட்சம் பேர் இந்தியாவுக்குத் திரும்ப அழைக்கப்பட்டார்கள்.

1964-ல் இலங்கை பிரதமர் சிறீமாவும், இந்தியப் பிரதமர் சாஸ்திரியும் செய்துகொண்ட ஒப்பந்தம் அக்டோபர் 30 திகதியோடு  50 ஆண்டுகளை நிறைவுசெய்திருக்கிறது.

            

இந்த சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் 50 ஆண்டுகளை கடந்தாலும் இன்னும் மலைய மக்களின் வாழ்வில் சுபீட்சம் எட்டவேயில்லை.

மலையக மக்களின் வாக்குளில் சொகுசு வாழ்க்கை நடத்தும் அரசியல் தலைகள் இனிமேலாவது கொஞ்சம் சிந்திக்கட்டும்.

மலையக மக்களின் அடிப்படைதேவைகள் அபிவிருத்தி கண்டு அவர்களும் சற்றேனும் சிந்திக்க ஆரம்பிப்பார்களானால் அங்கு அரசியல் செய்ய முடியாது என்பதை நன்கு அறிந்து தெரிந்தவர்களுக்கு அப்பகுதியின் அனர்த்த எச்சரிக்கை அறிந்து ஏன் ஒரு மாற்று வாழ்விடத்தை அமைத்துக் கொடுக்க இயலாது போனது என்பதுதான் இப்போது வலுப்பெற்றிருக்கும் முதன்மை கேள்வியாகிறது.

ஊவாவில் நடந்து முடிந்த தேர்தலின் போது, இன்று இன்னலுறும் அந்த மக்கள் வீடுதேடி வாக்கு வேட்டைக்காக மட்டுமாவது அந்த அரசியல் தலைமைகள் அங்கு செல்லாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை.

இன்று வாய்விட்டு அழுது புலம்பும் உறவுகளை தேடிச்சென்று உதவிக்கரம் நீட்டுவதால் மட்டும் அவர்கள் தேவைகள் முடிவுக்கு கொண்டுவரப்போவதில்லை.

இது இத்தோடு முடியட்டும்,இனிமேலாவது இப்படியான அனர்தத்திற்கு மலையக மக்கள் முகம் கொடுக்காமல் இருக்க இவர்களுக்கு இறைவனாவது உதவுவானா என்றே எண்ணத் தோன்றுகின்றது.

மண்ணோடு மண்ணாகி போன மலையக மனித இனத்தின் இந்த கறைபடிந்த இந்த சோக வரலாறு முடிவாகி, லயத்து வாழ்க்கை முறைமை ஒழிக்கப்பட்டு நிரந்தர வீடுகள் கட்டிகொடுக்க வேண்டும், அவர்கள் குறைகள் முற்றாக இல்லாவிட்டாலும் ஓரளவாவது தீர்க்கப்பட வேண்டும் என்பதே இப்போதைய எல்லோருடைய பிரார்த்தனையுமாகும்.

                                          
* த.ஹிந்து இணையத்திலிருந்து எடுக்கப்பட்ட வரலாற்று பதிவுகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டது .

*தில்லையம்பலம் தரணீதரன்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top