தலயின் 'என்னை அறிந்தால்' தீம் பாடல் - அதாரு உதாரு என்று ஆரம்பிப்பதாக உறுதிப்படுத்தாத தகவல்கள் பரவியிருந்தன.
இப்போது படத்தின் இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜே அதை உறுதிப்படுத்தியிருக்கிறார்.
அதாரு அதாரு
உதாரு உதாரு
பட்டாசும் சும்மா கொளுத்தாம வெடிக்கும்
இப்படி பாடல் வரிகளை அறிமுகப்படுத்தியிருந்தார் ஹரிஸ்.

ரசிகர்களுடன் நேற்று கலகலப்பாக ஹரிஸ் நடத்திய ட்விட்டர் மூலமான உரையாடலிலேயே இதை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.
இது மட்டுமல்லாமல், இந்த ஆரம்பப் பாடலை விஜய் பிரகாஷ் உடன் கானா பாலாவும் பாட இருப்பதாக சொல்லியுள்ள ஹரிஸ், நீட காலம் தனது இசையில் பாடாமல் இருந்த கார்த்திக் மீண்டும் 'என்னை அறிந்தால்' மூலம் பாடவுள்ளதாகவும் ஹரிஸ் ஜெயராஜ் ரசிகர்களைக் குஷிப்படுத்தியுள்ளார்.
அஜித் ரசிகர்கள் மிக குதூகலமாக பல்வேறு கோரிக்கைகளையும் ஹரிஸிடம் முன்வைத்தார்கள்.
அதில் தல நடந்து வரும் தீம் இசைகலக்கலாக இருக்கவேண்டும்.
ஹரிஸ் இசையமைத்த எல்லாப் படங்களையும் விட பாடல்கள் கலக்கலாக இருக்கவேண்டும்.
இப்படி பல..
இடையிடையே ஹரிஸ் ஜெயராஜின் அநேகன் பாடல்கள் பற்றிய கலாய்த்தல்கள் மற்றும் பாராட்டுக்கள் வேறு.